எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி உடனடி முத்தலாக் தடை மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. சமூகப் பிரிவை அடிப்படையாகக் கொண்டு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. முதல் முறையாக பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு இடஒதுக்கீட்டை வழங்கும் நடைமுறையை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. இதைத்தொடர்ந்து, மக்களவையில் இதற்கான சட்ட திருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. இதேபோல், மக்களவையில் தாக்கல் செய்யப்பட இருக்கும் குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கபோவதாக எதிர்கட்சிகள் அறிவித்துள்ளன. மாநிலங்களவையில் திருநங்கைகள் தனிநபர் மசோதா, உடனடி முத்தலாக் தடை மசோதாவும் தாக்கல் செய்யப்பட உள்ளன. இதனிடையே மாநிலங்களவை கூட்டத்தொடர் நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.