வெற்றிலையை ஒருமுறை நடவு செய்தால் 2ஆண்டுகள் பலன் – விவசாயிகள்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதிகளில் 200 ஏக்கரில் விவசாய நிலங்களில் வெற்றிலை நடவு தொடங்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

காவிரி ஆற்றின் வாய்க்கால் பாசனம் மூலம் விவசாயிகள் பல்வேறு பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். இந்தநிலையில் தற்போது வெற்றிலைக்கான நடவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வெற்றிலையில் கற்பூர வெற்றிலை மற்றும் பச்சைக்கொடி என இரண்டு ரகம் உள்ளது. இதனை நடவு செய்தால் இரண்டு ஆண்டுகள் பலன் கிடைக்கும் என்றும் இந்த நடவு பணிகள் தொடர்ந்து 200 ஏக்கரில் நடைபெற்று வருவதாகவும், மாதம் முழுவதும் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version