இந்திய மகளிர் கிரிக்கெட்அணி தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனாவுக்கு சிறந்தவீராங்கனை விருது

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஸ்மிருதி மந்தனா, 2021ஆம் ஆண்டின் சிறந்த வீராங்கனையாக ஐசிசி-யால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்தாண்டில், 22 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய ஸ்மிருதி மந்தனா, ஒரு சதம், 5 அரை சதத்தோடு, 855 ரன்களை குவித்திருந்தார்.

ஸ்மிருதி மந்தனா, ஓர் ஆண்டின் சிறந்த வீராங்கனையாக அறிவிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு, 2018ம் ஆண்டின் சிறந்த வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா தேர்தெந்தெடுக்கப்பட்டார்.

அந்த ஆண்டின் சிறந்த ஒருநாள் வீராங்கனையாகவும் ஸ்மிருதி மந்தனா தேர்தெடுக்கப்பட்டிருந்தார்.

Exit mobile version