பாகிஸ்தான் நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெல்லி நடனம் இடம்பெற்றது விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.
அஸர்பைஜான் நாட்டின் தலைநகர் பக்குவில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை பாகிஸ்தான் நடத்தியது. கடந்த 6 தினங்களாக நடைபெற்ற இந்த மாநாட்டின் நிறைவு நாளில், முதலீட்டாளர்களை கவருவதற்காக பெல்லி நடனம் இடம் பெற்றது. புதிய, புதிய மாடல்களை கொண்டு, இடைவிடாது நடந்த இந்த பெல்லி நடனத்தை பாகிஸ்தானின் ஊடகங்களும் ஒளிபரப்பியது. பாகிஸ்தான் அரசு நடத்திய, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இது போன்ற நடன நிகழ்ச்சி இடம் பெற்றிருப்பது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் பாகிஸ்தான் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெல்லி நடனம் சர்ச்சையான நிலையில், சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். மாநாட்டில் பங்கு பெற்ற முதலீட்டாளர்கள் பெல்லி நடனத்தை வீடியோவில் பதிவு செய்ததும் கேலிக்கு உள்ளாகியது. முதலீட்டாளர்களை கவரவே பாகிஸ்தான் அரசு பெல்லி நடன நிகழ்ச்சியை நடத்தியுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. அரசே இது போன்ற நடன நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருப்பதை அடுத்து அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கானை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.