ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலுக்கான நான்காம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
81 உறுப்பினர்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மூன்று கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இன்று 15 தொகுதிகளுக்கு மட்டும் நான்காம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு தற்போது வரை அமைதியாக நடைபெற்று வருகிறது.
மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகமுள்ள ஜமுவா, பகோதர், கிரிதி, தும்ரி, துண்டி ஆகிய 5 தொகுதிகளில் மட்டும் மாலை 3 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைகிறது. மற்ற 10 தொகுதிகளில் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.