நியூஸ் ஜெ செய்தியின் எதிரொலியாக சேத்தியாதோப்பு அருகே உள்ள வாழைக்கொல்லை பாசன மதகு சீரமைக்கும் பணிகளை பொதுப்பணி துறை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள வாழைக்கொல்லையில் உள்ள பாசன மதகு சேதமடைந்தது.மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட போது மதகு சேதமடைந்ததாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் நியூஸ் ஜெ தொலைக்காட்சியில் செய்தி வெளியானதை தொடர்ந்து மதகை சீர் செய்ய தமிழக அரசு 40 லட்சம் ரூபாயை ஒதுக்கியது. இந்நிலையில் பொதுப்பணி துறை அதிகாரிகள் மதகை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில், முதற்கட்டமாக ஏரிப்பகுதி பணிகளும், அப்பணி முழுமை பெற்ற பின் இரண்டாவது கட்டமாக மற்றொரு பகுதியையும் சரிசெய்கிறோம் என்று தெரிவித்தனர். மதகு விரைந்து சரி செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.