133 ஆண்டுகள் பழமையான ஏவி பாலத்திற்கு வர்ணம் பூசும் பணி தொடக்கம்

மதுரையில் 133 ஆண்டுகள் பழமையான ஏவி பாலத்திற்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பில் கண்கவரும் வர்ணம் பூசும் பணி தொடங்கியுள்ளது.

மதுரையில் வைகை ஆற்றின் இரு கரைகளையும் இணைக்கும் வகையில் 1886ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட ஏவி மேம்பாலம் சுமார் 133 ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக காட்சியளிக்கிறது. சில தினங்களுக்கு முன்பு பாலத்தின் மேற்பகுதி பழுதடைந்த நிலையில், பாலத்தை பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதனையடுத்து தமிழக நெடுஞ்சாலைத் துறை கட்டுபாட்டில் உள்ள இந்த பாலத்தில் சுமார் 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் முதல்கட்ட மராமத்து பணி தொடங்கியுள்ளது. மக்களை கவரும் வகையில், வர்ணங்களை பூசும் பணி நடைபெற்று வரும் நிலையில், இந்த பணிகள் இரண்டு மாதங்களில் முடிவடையவுள்ளதாக தமிழக நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version