திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்காச்சோளம் உள்ளிட்ட மானாவாரி பயிர்கள் விதைப்பு நடைபெற்று வருகிறது.
ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் தங்களது நிலங்களில் பாரம்பரிய முறைப்படி மாடுகளைக் கொண்டு ஏர் பூட்டி மக்காச்சோளம் விதைத்து வருகின்றனர். தனியார் மக்காச்சோள விதைகள் ஆயிரம் முதல் ஆயிரத்து 500 வரை விற்கப்படுவதாக குற்றம்சாட்டும் விவசாயிகள், அரசு மானிய விலையில் சோள விதைகளை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.