சென்னை வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் உயர் மேம்பாட்டு நிறுவனத்தில் பி.எட் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது. உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் கலந்தாய்வை துவங்கி வைத்தார்
தமிழகத்தில் உள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரிகள் மற்றும் 14 அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரத்து 40 பி.எட் இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்படுகின்றன. அதன்படி, இன்று துவங்கிய கலந்தாய்வு 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல்நாள் கலந்தாய்வில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், பி.இ. – பி.டெக். மாணவர்கள் பங்கேற்கின்றனர். கலந்தாய்வை துவக்கி வைத்து பேசிய அமைச்ச்ர் கேபி அன்பழகன் அனைத்து கல்வியியல் கல்லூரிகளுக்கும் விரைவில் முதல்வர்கள் நியமிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்தார்.