குண்டேரிப்பள்ளம் உபரிநீர் ஓடையில் தடுப்பணைகள் கட்டும் பணி தொடக்கம்

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையின் உபரிநீர் ஓடையில் தடுப்பணைகள் கட்டுவதற்கான கட்டுமானப்பணியை, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜையிட்டு துவக்கி வைத்தார்.

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையத்தில்  அமைந்துள்ள குண்டேரிப்பள்ளம் அணையிலிருந்து, மழைக்காலங்களில் அதிகளவு உபரிநீர் வெளியேற்றப்பட்டு, பவானி ஆற்றில் வீணாக கலந்து வந்தது.

இதனால் குண்டேரிப்பள்ளம் அணையின் உபரிநீர் ஓடையில் இரண்டு தடுப்பணைகள் கட்டவேண்டும் என அப்பகுதி விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் தமிழக அரசு குண்டேரிப்பள்ளம் அணையின் உபரிநீர் ஓடையில் இரண்டு தடுப்பணைகள் கட்டுவதற்காக  7 கோடியே 51 லட்சரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.  அதன்அடிப்படையில் தடுப்பணைகள் கட்டுவதற்கான தொடக்கப்பணிகளை,  தமிழக பள்ளிகல்விதுறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமிபூஜையிட்டு  தொடங்கி வைத்தார்.

Exit mobile version