விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான, மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தை தயார்படுத்தும் பணியினை மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன் தொடங்கி வைத்தார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதால், அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட சேமிப்பு குடோனில் வைத்திருக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன், அரசியல் கட்சியினர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
அப்போது வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறையாக செயல்படுகிறதா? என்று சோதித்து பார்க்கப்பட்டது. மூன்று நாட்கள் நடைபெற உள்ள பணியில், 550 EVM இயந்திரம், மற்றும் 550 VVPAT இயந்திரங்கள் தயார்படுத்தபட உள்ளன. இதில் அதிமுக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த் பிரதிநிதிகள் பலர் உடனிருந்தனர்.