நீதிபதி முன்பு மனைவியை கத்தியால் குத்திய கணவன்

விவாகரத்து வழக்கில் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனைவியை, கணவன் கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவகாரத்து வழக்கு நீதிபதி கலைவாணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி முன்பு தனது மனைவி வரலட்சுமியை அவரது கணவன் சரவணன் கத்தியால் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த வரலட்சுமி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சரவணை கைது செய்த போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு மற்றும் சோதனையை அதிகப்படுத்த காவல்துறைக்கு நீதிபதி அறிவுறுத்தி உள்ளார்.

Exit mobile version