கருவண்டை விழுங்கிய 9 மாத குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யாமலேயே அகற்றிய சாத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு பாராட்டுக்குள் குவிந்து வருகின்றன.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் குறிஞ்சி நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் 9 மாத குழந்தையான சுபஸ்ரீ, விளையாடிக் கொண்டிருந்தபோது, அவரது வாய்க்குள் கருவண்டு ஒன்று புகுந்து கொண்டது. சிறிது நேரத்தில் ரத்த வாந்தி எடுத்த சுபஸ்ரீ பின்னர் மயக்கமானார்.
இதையடுத்து அவரது பெற்றோர், சுபஸ்ரீயை சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். மருத்துவர் கேசவன் தலைமையில், அறுவை சிகிச்சை இன்றி கருவண்டை மருத்துவர்கள் அகற்றினர். சுபஸ்ரீ-க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு குழந்தையின் பெற்றோர் நன்றி கூறினர்.