உலகிலேயே மிக பெரிய ராட்சத தேனீ கண்டுபிடிப்பு

உலகிலேயே மிக பெரிய ராட்சத தேனீ இந்தோனீசிய தீவில் தற்போது மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நம் கையின் கட்டைவிரல் அளவில் இருக்கும் பெரிய ரட்சத தேனீ பற்றின ஆய்வுகள் இதுவரை மிக குறைவாகவே ஆய்வாளர்களால் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தேனீயின் பெயர் ‘வாலேஸ்’ ரட்சத தேனீ’.

1858ம் ஆண்டு இந்த தேனியை பற்றி விளக்கமளித்த பிரிட்டிஷ் இயற்கை மற்றும் ஆய்வாளர் ஆப்ஃபிரெட் ருசெல் வாலஸின் பெயரால் இது ‘வாலேஸ்’ என்று அழைக்கப்படுகிறது.

பல நாட்கள் இந்தோனேசிய தீவில் நடத்தப்பட்ட ஆய்விற்கு பிறகு வனவிலங்கு நிபுணர்கள் உயிரோடு இந்த பெரிய பெண் ராட்சத தேனீயை கண்டுபிடித்துள்ளனர்.

இந்தோனீசியாவின் மூன்று தீவுகளில் இந்த பூச்சி பற்றிய பல்வேறு மாதிரிகளை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

Exit mobile version