ராமநாதபுரம் அருகே தண்ணீர் பற்றாக்குறையால் வெளிநாட்டுப் பறவைகள் வருகை குறைந்துவிட்டதாக பொதுமக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இனப் பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பறவைகள் ராமநாதபுரம் அருகே உள்ள தேர்தங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வருகின்றன. இங்குள்ள நீர்நிலைகளில் ஓரிரு மாதங்கள் தங்கி முட்டையிட்டு, குஞ்சு பொறித்து அவற்றுடன் பறவைகள் தாயகம் திரும்புகின்றன. இந்நிலையில், இந்தாண்டு போதிய பருவமழை பெய்யாததால், நீரின்றி வெளிநாட்டு பறவைகள் வருகை குறைந்து காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.