80 வயது பாட்டி அறுவை சிகிச்சை மூலம் இளமைக்கு திரும்பிய அதிசயம்

80 வயது பாட்டி ஒருவர் £ 10,000 செலவில் முகமாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். இந்திய மதிப்பு படி சுமார் 8 லட்சம் ரூபாய் வரும்.

பிரிட்டன் நாட்டை சேர்ந்த டோனி கோல்ட்பர்க் என்கிற 80 வயது பாட்டி முதுமை தோற்றத்தை வெறுத்து இளமைக்கு திரும்ப ஆசைப்பட்டார். அதற்காக சுமார் 8 லட்சம் செலவு செய்து அறுவை சிகிச்சை மேற்கொண்டு இளமைக்கு திரும்பியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர் அறுவை சிகிச்சைக்காக நான் மருத்துவரிடம் சென்ற போது, அவர் என்னை எச்சரித்தார். வயதான காலத்தில் இந்த அறுவை சிகிச்சை செய்தால் உயிர் பிழைப்பது கடினம் என கூறினார்.

இறந்தாலும் பரவாயில்லை. இந்த வயதான தோற்றத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என பதில் கூறினேன்.இந்த அறுவை சிகிச்சை முடிந்த பிறகு தான் என்னுடைய எதிர்காலம் மகிழ்ச்சியாக இருக்கிறது.

என்னை 10 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு சென்றுள்ளது.ஒவ்வொரு நாளும் என்னுடைய நம்பிக்கை அதிகரிக்கிறது. நான் மிகச்சிறப்பாக இருப்பதை போல உணர்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Exit mobile version