அழிவின் விளிம்பில் உள்ள ருமேனிய பழுப்புக் கரடிகளின் நடமாட்டம் குறித்து அறிய அந்நாட்டின் வனப்பகுதியில் ஆங்காங்கே கேமராக்கள் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் போக்ஸி என பெயரிடப்பட்ட கரடி ஒன்று பாறையைக் கண்டதும் இருகால்களால் நின்று கொண்டு சிறு குழந்தை போல இடுப்பை அங்குமிங்குமாக அசைத்தும், நடனமாடுவதுபோல முதுகைச் சொறிந்து கொண்டது. கரடியின் இந்த செயல் அங்கிருந்த கேமராவில் பதிவானது.
இது தற்போது இணைத்தில் வெளியாகியுள்ளதையடுத்து ஏராளமானோர் கரடியின் செயலை கண்டு ரசித்து வருகின்றனர்.