இன்று BCCI கூட்டம்: உலக கோப்பையில் பாகிஸ்தான் புறக்கணிக்கப்படுமா?

புல்வாமா தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுடனான அனைத்து தொடர்பையும் துண்டிக்கும் கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், உலக கோப்பையில் பாகிஸ்தானை புறக்கணிப்பது தொடர்பான பிசிசிஐ கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 40 பேர் உயிரிழந்தனர். இதற்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது இயக்கம் பொறுப்பேற்றதையடுத்து, பதில் நடவடிக்கை மேற்கொள்ள இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. இதனிடையே, இங்கிலாந்தில் உலக கோப்பை போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், தொடரிலிருந்து பாகிஸ்தானை வெளியேற்றுவது, மற்றும் அந்நாட்டுடனான போட்டியை புறக்கணிப்பது தொடர்பான கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

அட்டவணையில் எந்த மாற்றமும் இருக்காது என ஐசிசி தெரிவித்துள்ள நிலையில், இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு கடிதம் எழுதவும் பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இறுதி முடிவு எடுப்பது தொடர்பாக பிசிசிஐயின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version