தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பயன்படுத்திய இளம் இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷாவிற்கு போட்டிகளில் பங்கேற்க 8 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பயன்படுத்திய தொடர்பான புகாரில் இந்திய இளம் கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷாவிற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. 19 வயதே ஆன பிரித்வி ஷா 2018 ஆம் ஆண்டில் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டிகளில் இரண்டு சதமடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பங்கேற்க இருந்த நிலையில், இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகினார்.
இந்த நிலையில், காயம் குணமடைந்து சையத் முஷ்டாக் அகமது 20 ஓவர் போட்டியில் பங்கேற்று விளையாடி வந்தார். அப்போது தடை செய்யப்பட்ட டெர்புடலைன் என்ற பிசிசிஐ ஆல் தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியுள்ளதாக சோதனையில் தெரியவந்தது. இதனையடுத்து அவர் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் 8 மாதங்கள் பங்கேற்க தடை விதித்து பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது