கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் மரகதாம்பிகை உடனுறை சந்திர சூடேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தில் துர்நாற்றம் வீசியதால் மூட்டை மூட்டையாக வெட்டிவேர் வீசப்பட்டது. தேர்ப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள சந்திரசூடேஸ்வரர் கோவிலில் வரும் 20ம் தேதி தேர்த் திருவிழா மற்றும் தெப்ப உற்சவம் நடக்க உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசி வரும் இந்த தெப்பக்குளத்தை மணக்க வைக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னாள் எம்.எல்.ஏ., மனோகரன் தலைமையில் நடந்த இந்நிகழ்வில் எட்டு மூட்டைகளில் வெட்டிவேர் மற்றும் மேலும் சில இயற்கை மூலிகைகள் குளத்தில் வீசப்பட்டன. மருத்துவ குணம் கொண்ட வெட்டிவேர், துர்நாற்றத்தை ஏற்படுத்தும் நச்சுகளை அழிக்கும் என்பதால் இந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டது.