பேட்டரியில் நீண்ட தூரம் இயங்கக்கூடிய கார்களுக்கான கண்காட்சி

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், சிறிய அளவில் தயாரிக்கப்பட்டுள்ள மின்சார கார்களின் கண்காட்சி நடைபெற்று வருகிறது…

காற்றுமாசு விதிகளை உலக நாடுகள் கடுமையாக்கியதை அடுத்து, கார் நிறுவனங்கள் நீண்ட தூரம் பயணிக்கும் மின்சார கார்களை போட்டி போட்டுக்கொண்டு உற்பத்தி செய்து வருகின்றன.

அந்தவகையில் ஜப்பானை சேர்ந்த கார் நிறுவனங்கள், பேட்டரியில் இயங்கும் சிறிய அளவிலான மின்சார கார்களை அறிமுகம் செய்துள்ளன. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த மின்சார கார்களை காட்சிப்படுத்தும் கார் கண்காட்சி இன்று டோக்கியோவில்
தொடங்கியது.

இதில் நிசான், டொயாட்டோ உள்ளிட்ட பிரபலமான நிறுவனங்களின் விதவிதமான மின்சார கார்கள் காட்சிப்படுத்தப்பட்டு, பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது

Exit mobile version