வவ்வால்களின் வாழ்விற்காக பட்டாசு சப்தம் இல்லாமல் தீபாவளியை கொண்டாடும் கிராம மக்கள் – சிறப்பு தொகுப்பு

வவ்வால்களின் வாழ்விற்காக தீபாவளி பண்டிகையை சப்தம் இல்லாமலும், மாசு ஏற்படுத்தாமலும் கொண்டாடும் கிராம மக்கள் பற்றிய ஒரு சிறிய செய்தி தொகுப்பு….

தீபாவளி என்றாலே புத்தாடை, இனிப்பு, காரம் ஆகியவை தான் நம் நினைவுக்கு வரும் என்றாலும், பட்டாசு, மத்தாப்பு என்பதை தவிர்த்து நிச்சயமாக ஒருதீபாவளியை  கொண்டாடிவிட முடியாது. ஆனால், பட்டாசை தவிர்த்து மன நிறைவான தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்,மணப்பாறையை அடுத்த தோப்புப்பட்டி கிராம மக்கள். இந்த கிராமத்தில் குறைந்த அளவிலான குடும்பத்தினர் மட்டுமே வசித்து வருகின்றனர். அங்கு எப்போது சென்றாலும் ஒரு புறம் மயானஅமைதியையும், மற்றொரு புறம் வவ்வால்களின் சப்தம் கேட்காமல் இருப்பதும் அரிதான ஒன்று தான். ஏனெனில் முனியப்பன் கோவில் அருகே ஒரு பெரிய காய்ந்த ஆலமரம் மற்றும் புளியமரத்தில் உள்ள வாவ்வாகள் தலை கீழாக தொங்கி நிலையிலும் சப்தத்தை எழுப்பியவாறும் இக்கிராமத்தில் உள்ளது.

ஆரம்ப காலங்களில் வவ்வால்கள் குறைந்த அளவில் இருந்தாலும், நாளடைவில் அவற்றை பாதுகாக்க கிராம மக்கள் எடுத்த முயற்சி முகவும் சிறப்பிற்குரியது. எனவே தான் இன்று பல்லாயிரக்கணக்கான வவ்வால்கள் ஒரே இடத்தில் கூடி வாழ்கின்றன.

இங்கு வாழும் வவ்வால்களுக்கு எந்த வித இடையூறும் ஏற்படக்கூடாது என்ற கிராம மக்களின் உயரிய சிந்தனை தான், அந்த பகுதியில் சப்தம் என்பதை கேட்க முடியாது. இன்னும் சொல்ல போனால் மனிதர்கள் கூட சத்தம் போட்டு பேசுவது அரிதான ஒன்று. அப்படிப்பட்ட நிலையில், தீபாவளி தினத்தன்று ஒரு நாள் சந்தோஷத்தையும் தவிர்த்து, வவ்வால்களுக்காக பட்டாசு இல்லா தீபாவளியை மாசு 
இல்லாமல் மன நிறைவுடன் கொண்டாடுகின்றனர் தோப்புப்பட்டி கிராம மக்கள்

Exit mobile version