ஒகேனக்கல்லில் குளிக்க 4 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் தடை

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 4 ஆயிரம் கன அடியாக குறைந்த போதிலும், சுற்றுலாப் பயணிகள் மெயின் அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை 137வது நாளாக நீட்டிக்கப்பட்டு வருகிறது.

கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரித்து இருந்தது. இந்நிலையில், தற்போது மழையின் தாக்கம் குறைந்துள்ளதால் தமிழக எல்லையான பிலிகுண்டுலு  வழியாக தருமபுரி மாவட்டம், ஒகேனக்கலுக்கு வரும் நீரின் வரத்து இரண்டாவது நாளாகத் தொடர்ந்து 4 ஆயிரம் கன அடியாக நீடித்து வருகிறது.  நீர்வரத்து குறைந்தாலும் உபரிநீர் சமநிலையிலேயே உள்ளதால் அருவியில் உள்ள தடுப்பு வேலிகளில் ஏற்பட்டுள்ள சேதங்களை சீரமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்  சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி தொடர்ந்து 137வது நாளாக அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.

Exit mobile version