ஒகேனக்கல்லில் நீர்வரத்து குறைந்தும், தொடர்ந்து 90 வது நாளாக அருவியில்குளிக்கவும், 20வது நாளாக பரிசல் இயக்கவும் தடை நீடிக்கிறது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு, குறைந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடக்கூடிய, உபரி நீர் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நேற்று தமிழக எல்லையான பிலிகுண்டுலுவிலுக்கு, நீர்வரத்து 11,000 கன அடியாக இருந்த நிலையில் தற்போது வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. இதற்கிடையில், பிலிகுண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து குறைந்தும், முன்னெச்சரிக்கையாக தொடர்ந்து 20 வது நாளாக பரிசல் இயக்கவும், 90வது நாளாக அருவியில் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடையானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை மட்டும் ரசித்து விட்டு, திரும்பச் செல்கின்றனர்.