ஊரடங்கால் கேரளாவில் இருந்து மூங்கில் வராததால் கூடை பின்னும் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூடை பின்னும் தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மூங்கில் கூடைகள் பின்னும் தொழிலில் ஆயிரக்கணக்கான மக்கள் ஈடுபட்டுள்ளனர். எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மூங்கில் மற்றும் ஈச்ச மரங்கள் வரவழைக்கப்பட்டு கூடைகள் பின்னும் தொழில் நடைபெற்று வருகிறது. ஊரடங்கால் போக்குவரத்து நிறுத்தப்பட்டதை அடுத்து மூலப்பொருட்கள் வருகை பாதிக்கப்பட்டது. இதனால், காய்கறி கூடைகள், பூக்கூடைகள் மற்றும் கோழிப் பண்ணைகளில் பயன்படுத்தப்படும் கூடைகள் செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என மூங்கில் கூடை பின்னும் தொழிலாளர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.