கூட்டுறவு துறைக்கு கடந்த திமுக அரசு மூடு விழா நடத்தியது – கதர் கிராம வாரியத் தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் ஆவேசம்

எங்களை குறை கூறி எதிர்ப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று, கதர் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கையில் 65வது கூட்டுறவு வாரவிழா  நடைபெற்றது. இதனையொட்டி, கூட்டுறவு  சங்கம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இவ்விழாவில், கலந்து கொண்ட கதர்  கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

கூட்டுறவு துறைக்கு கடந்த திமுக அரசு மூடு விழா நடத்தியதாகவும், அதனை மீட்டு, வளர்ச்சிப்பாதைக்கு அழைத்து சென்றது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு எனவும் தெரிவித்தார்.

 

 

 

 

Exit mobile version