கூடா நட்பு கேடாய் முடியும் என்று காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகிய திமுக, மீண்டும் எந்த அடிப்படையில் கூட்டணி சேர்ந்துள்ளது என்று அமைச்சர் தங்கமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு நாமக்கல்லில் நடைபெற்ற பொது கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவராக உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்து ஸ்டாலின் அவதூறாக பேசி வருவதற்கும் கண்டனம் தெரிவித்தார். .