கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை பதவியேற்று கொண்டார்.
கர்நாடகாவில் எடியூரப்பா, இரண்டு ஆண்டு ஆட்சியை நிறைவு செய்து பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, பெங்களூருவில் நேற்று நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், சவராஜ் பொம்மை புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
பெங்களூருவில், இன்று காலை பகவான் ஸ்ரீ மாருதி கோயிலில் வழிபட்ட பசவராஜ் பொம்மை, கட்சி மேலிட பார்வையாளரான மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதையடுத்து, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், கர்நாடகாவின் 23-வது முதலமைச்சராக பசவராஜ் பொம்மை பதவியேற்று கொண்டார்.
அவருக்கு ஆளுநர் தவார் சந்த் கெலாட் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இந்த பதவியேற்பு விழாவில் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, கட்சி மேலிட பொறுப்பாளர் அருண் சிங், மேலிட பார்வையாளர்கள் தர்மேந்திர பிரதான், கிஷண்ரெட்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பசவராஜ் பொம்மை தலைமையிலான ஆட்சியில் ஆட்சியில் ஸ்ரீராமலு, கோவிந்த் கர்ஜோல், அசோகா ஆகிய மூவர் துணை முதலமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது.