பார்பி பொம்மை உருவாக்கப்பட்டதன் 60வது ஆண்டு கொண்டாடத்தை முன்னிட்டு, அதன் கனவு இல்லத்தில் ரசிகர்கள் தங்கும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
குழந்தைகளால் மிகவும் விரும்பப்படும் பார்பி பொம்மையை, அமெரிக்காவை சேர்ந்த ரூத் ஹாண்ட்லர் என்பவர் கடந்த 1959 ஆம் ஆண்டு உருவாக்கினார். உலகம் முழுதும் மிகவும் பிரபலமடைந்துள்ள பார்பி பொம்மை, இந்தாண்டு தனது 60வது பிறந்த நாளை கொண்டாடுகிறது.
இதனை முன்னிட்டு மனிலாவில் உள்ள பார்பியின் கனவு இல்லத்தில், அதன் ரசிகர்கள் ‘விருந்தினர்களாக’ தங்கி செல்லும் வாய்ப்பு அளிக்கப்படவுள்ளது.
கடற்கரையோரம் அமைந்துள்ள இந்த கனவு இல்லத்தில் 4 படுக்கை அறைகள், தியான அறை, பொழுதுபோக்கு ஸ்டுடியோ உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
மேலும், ஒரு இரவு இந்த வீட்டில் இரு இரவுகள் தங்குவதற்கு, இந்திய மதிப்பில் நான்காயிரத்து 272 ரூபாய் வீதம் வாடகை கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.