வெள்ளியங்கிரி மலையில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்த தடை

கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலையில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்த அனுமதி கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வெள்ளியங்கிரி மலையில் உள்ள சுயம்பு ஆண்டவர் கோவிலில் டிசம்பர் 10 ம் தேதி முதல் 12 ம் தேதி வரை தீபம் ஏற்ற அனுமதிக்க கோரி சரவணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தீபம் ஏற்ற வருபவர்கள் வனப்பகுதியில் தங்குவதால் காடுகள் அழிக்கப்படுவதாகவும், தீபம் ஏற்றுவதால் வனவிலங்குகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகும் என்பதால் தீபம் ஏற்ற அனுமதிக்க கூடாது என பொது மக்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. மேலும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால், தீபம் ஏற்றி வழிபாடு நடத்த அனுமதிக்க முடியாது என வனத்துறை சார்பிலும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வெள்ளியங்கிரி மலையில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்த அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Exit mobile version