மறுஉத்தரவு வரும்வரை தமிழகத்தில் பேனர்கள் வைக்கத்தடை – உயர்நீதிமன்றம் அதிரடி

தமிழகத்தில் பேனர்கள் வைக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவிற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோரை வரவேற்கும் வகையில் சென்னையில் பல்வேறு இடங்களில் வரவேற்பு பேரனர்கள் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

போக்குவரத்து விதிகளை மீறி பேனர்கள் வைத்ததாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு, பேனர் வைப்பதில் அரசியல் கட்சிகளுக்கிடையே பாரபட்சம் இல்லை எனவும், அனைத்து கட்சிகளுமே விதிமுறைகளை மீறி பேனர்களை வைத்துவருகின்றனர் என்றும் கருத்து தெரிவித்தனர்.

அரசியல் கட்சிகள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், உரிய நடைமுறைகளையும், விதிகளையும் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தனர். மறுஉத்தரவு வரும் வரை தமிழகத்தில் பேனர் வைக்க இடைக்கால தடைவிதித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜனவரி 4ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Exit mobile version