காவல்துறை அனுமதி பெற்றே பேனர்கள் வைக்க வேண்டும்

காவல் துறையின் தடையில்லா சான்று பெற்றும், ஆட்சியரின் அனுமதி பெற்றும் பேனர்கள் வைக்க வேண்டும் என நாமக்கல் ஆட்சியர் ஆசியா மரியம் தெரிவித்துள்ளார். விதிகளை மீறுபவர்களுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என ஆசியா மரியம் எச்சரிக்கை விடுத்துள்ளார். பொது இடங்களில் டிஜிட்டல் பேனர்கள் வைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆயிரத்து 626 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version