பேனர் விவகாரம்: நீதிமன்றத்தில் அதிமுக பிரமாணப் பத்திரம் தாக்கல்

கட்சி நிகழ்ச்சிகளில் பேனர் வைக்க கூடாது என கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி இருப்பதாக அதிமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பேனர் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது, அ.தி.மு.க அமைப்பு செயலாளர் ஜே.சி.டி பிரபாகர் சார்பில் உறுதிமொழி பத்திரம் சமர்பிக்கப்பட்டது. அதில் உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில், கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே, அ.தி.மு.க வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இணைந்து, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு காவல்துறை அனுமதியின்றி பேனர் வைக்க கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த மாதம் அதை நினைவுபடுத்தும் வகையில், மீண்டுமொரு அறிக்கை விடுத்துள்ளதாகவும், அதில் கட்சியினர் இல்ல நிகழ்ச்சிகளுக்கு வரவேற்பு என்ற பெயரில் பேனர் வைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தபட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version