கருப்பு உடை அணிய மாணவர்களுக்குத் தடை – ஐஐடி நிர்வாகம்

சென்னை ஐஐடி வளாகத்தில் இன்று நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் பங்கேற்க உள்ளதால் மாணவர்கள் கருப்பு உடை அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் இன்று மாலை 5 மணிக்கு “2020 முதல் 2030 வரை இந்தியா” என்ற தலைப்பில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளார். இதனால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலபடுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து குடியரசுத் துணைத் தலைவரின் வருகையையொட்டி ஐ.ஐ.டி. மாணவ, மாணவியர் கருப்பு நிற உடைகள் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடியோ, புகைப்படம் எடுக்கவும், பிளாஸ்டிக் பைகளை எடுத்து வரவும் தடை விதித்து ஐ.ஐ.டி. நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது. முன்னதாக இரு நாட்களுக்கு முன்னர் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் வெங்கையா நாயுடு பங்கேற்ற நிகழ்ச்சியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது

Exit mobile version