கார்-வீட்டு கடனுக்கான வட்டி குறைகிறது: நிர்மலா சீதாராமன்

கார் மற்றும் வீட்டு கடன் வட்டி குறைக்கப்படும் என்றும், ஜிஎஸ்டி-யில் மாற்றம் கொண்டு வரப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உலக பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டிருந்தாலும், இந்தியாவின் பொருளாதாரம் சீராகவே உள்ளது என்றார். சீனாவை விட இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்த நிலையில் தான் உள்ளது என்று கூறிய அவர், ஜிஎஸ்டி வரி விகிதம் எளிமையாக்கப்படும் என உறுதியளித்தார்.

வரி ஏய்ப்பு உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், நடுத்தர குடும்பத்தினரும் பயன்பெறும் வகையில் வங்கிகள் மூலமாக வழங்கப்படும் கார் மற்றும் வீட்டு கடன் வட்டி குறைக்கப்படும் என்றார்.

Exit mobile version