மத்திய தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலை நிறுத்தம், கேரளாவில் முழு வீச்சில் நடைபெறுகிறது. அதனால், கேரளா செல்லும் தமிழகப் பேருந்துகள், எல்லைப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்ப்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சில மத்திய தொழிற் சங்கங்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தை இன்று நடத்தி வருகின்றன. கேரள மாநிலத்தில் உள்ள 19 தொழிற் சங்கங்கள், இந்த வேலை நிறுத்தத்தில் முழுமையாகப் பங்கெடுத்துள்ளன. அதன் காரணமாக, அங்கு அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் முற்றிலும் முடங்கிவிட்டது. மேலும், அந்த மாநிலத்தில் வேலை நிறுத்தம் செய்யும் தொழிற் சங்கங்கள், போக்குவரத்தையும் தடைசெய்துள்ளன. அதனால், தமிழகத்தில் இருந்து கேரளா சென்ற பேருந்துகள், அந்த மாநிலத்திற்குள் செல்ல முடியாமல், தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.