இரு நாடுகளுக்கிடையேயான உறவை மேம்படுத்தும் விதமாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா 4 நாட்கள் சுற்றுப் பயணமாக இன்று இந்தியா வரவுள்ளார்.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா 4 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வருகிறார். இந்த சுற்றுப் பயணத்தின் போது, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடியை சந்தித்து, இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் இருதரப்பு திட்டங்கள் காணொலி மூலம் தொடங்கப்படும் எனவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. உலக பொருளாதார மன்றம் சார்பாக நடைபெறும் இந்திய பொருளாதார உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக ஷேக் ஹசினா கலந்து கொள்ள உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.