கிரிக்கெட் உலக கோப்பையின் நேற்று நடைபெற்ற 26 ஆவது லீக் போட்டியில் பங்களாதேஷ் அணி ஆஸ்திரேலியா அணியிடம் 48 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்தது
ஐசிசி உலககோப்பை போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் பங்களாதேஷ், ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இதில் டாசில் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி தொடக்க முதலே ரன் குவிப்பில் ஈடுப்பட்டது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பின்ச் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவன உயர்த்தினர்.
முதல் விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்தபோது ஆரோன் பின்ச் 53 ரன்களில் அரைசதமடித்து வெளியேறினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் தொடரின் இரண்டாவது சதமடித்தார். அதிரடியாக விளையாடி வந்த நிலையில்,166 ரன்களை எட்டியபோது சவும்ய சர்கார் பந்துவீச்சில் வெளியேறினார். 2 ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மற்ற வீரர் உஸ்மான் காவாஜா , தனது பங்கிற்கு அரை சதமடித்து 89 ரன்களை குவித்து வெளியேறினார். இதனையடுத்து வந்த மற்ற வீரர்கள் ஓரளவு விளையாட ஆஸ்திரேலியா அணி நிர்ணையிக்கப்பட்ட 50 ஓவரில் 381 ரன்களை குவித்தது.
இதனை தொடர்ந்து விளையாடிய பங்களாதேஷ் அணியின் தொடக்க ஆட்டக்காராக தமிம் இக்பால் மற்றும் சவும்ய சர்க்கார் களமிறங்கினர். அணியின் ஸ்கோர் 23 ரன்களை எட்டியபோது சவும்ய சர்க்கார் 10 ரன்களை எடுத்து வெளியேறினார். இதனை தொடர்ந்து வந்த சகிப் அல் ஹாசன் 41 ரன்களை குவித்து வெளியேற, சிறப்பாக விளையாடி வந்த தமிம் இக்பால் 62 ரன்களை குவித்து அரைசதமடித்து வெளியேறினார். இதனைதொடர்ந்து வந்த முஸ்பிகுர் ரகிம் தொடக்கமுதலே சிறப்பாக விளையாடி வந்த நிலையில், அவருடன் ஜோடி சேர்ந்த மற்ற வீரர் மஹம்முதுல்லா தனது அரைசதத்தை நிறைவு செய்தார்.
சிறப்பாக விளையாடி வந்த இருவரும் பந்தை நாலாபுரமும் அடித்து விளையாட அணியின் ஸ்கோர் சீரான இடைவெளியில், உயரந்தது. மஹம்முதுல்லா 69 ரன்களை எடுத்த போது வெளியேறினார். இதனையடுத்து வந்த மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற முஸ்பிகுர் ரஹீம் சதம் அடித்து அசத்தினார். இறுதியாக 50 ஆவது ஓவர் முடிவில் பங்களாதேஷ் அணி 8 விக்கெட்டை இழந்து 333 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது. இதனால் 48 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி ஆஸ்திரேலியா அணியிடம் போராடி தோல்வி அடைந்தது.