பெங்களூர் அணிக்கு ரசிகர்களின் ஆதரவு வேண்டும்- விராட் கோலி வேண்டுகோள்

ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்கு ரசிகர்களின் ஆதரவு வேண்டும் என்று அந்த அணியின் கேப்டன் விராட் கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஐபிஎல் தொடரில் களமிறங்கி அணிகளில் ஒன்று பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ். தொழிலதிபர் விஜய் மல்லையா நிர்வகித்த அந்த அணியின் நிலைமை அவரால் இந்திய வங்கிகள் பட்ட அவஸ்தையை போல் மிகக் கொடுமையானது.காரணம் இந்திய அணியின் வெற்றி கேப்டனாக வலம் வரும் விராட் கோலி தான் பெங்களூர் அணியின் கேப்டன் ஆவார். ஆனால் இதுவரை அவர் தலைமையிலான அணி ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை என்பதுதான் சோகத்தின் உச்சம்.

கடந்த மூன்று ஐபிஎல் போட்டிகளில் பெங்களூர் அணி இரண்டு முறை எட்டாவது இடத்தைப் பிடித்தது. இதனால் அணியின் கேப்டன் டிவிலியர்ஸ் நியமிக்கப்படலாம் என்ற கருத்து நிலவி வந்த நிலையில் அதனை அணி நிர்வாகம் மறுத்தது.

இந்நிலையில் இன்று கொல்கத்தாவில் ஐபிஎல் ஏலம் ஆரம்பிக்கவுள்ள நிலையில் பெங்களூர் அணிக்கு ரசிகர்களின் ஆதரவு தேவை என அந்த அணியின் கேப்டன் விராட் கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார். மிகவும் இக்கட்டான சோதனையில் இருக்கும் தங்களது அணியை எவ்வாறு  வலுவாக கட்டமைப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக விராட் கோலி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் உங்களது ஆதரவால் தான் நாங்கள் ஒவ்வொராண்டும் தோல்வியின் பிடியிலிருந்து மீண்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

Exit mobile version