பெங்களூருவில் போர் விமானம் விபத்து : 2 பைலட்டுகள் உயிரிழப்பு

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஹெச்.ஏ.எல் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட மிராஜ் 2000 போர் விமானம் பரிசோதனைக்கு விடப்பட்டது. இந்நிலையில் விமானம் எதிர்பாராதவிதமாக தரையில் விழுந்து தீப்பிடித்தது.  இதில் பயிற்சி விமானிகள் நேகி மற்றும் ஆப்ரோல் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். போர் விமானம் பயிற்சியின் போது விபத்துக்கு உள்ளான சம்பவம் குறித்து, அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version