காருக்கு இணையாக களமிறங்கிய tvs jupiter grande edition…!

இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் மாடல்களில் 2வது இடத்தில் உள்ளது tvs jupiter ஸ்கூட்டர். இதை தொடர்ந்து கூடுதல் தொழில்நுட்ப அம்சங்களுடன் கூடிய புதிய tvs jupiter grande edition மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஸ்கூட்டர் அதிக சிறப்பம்சங்களை கொண்டு tvs jupiter grande edition என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடலில் தற்போது கூடுதலாக பல தொழில்நுட்ப அம்சங்களான bluetooth இணைப்பு மற்றும் பல வசதிகள் tvs jupiter grande edition மாடலில் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வசதி மூலமாக, ஸ்மார்ட்ஃபோனுடன் இணைத்துக் கொண்டு அழைப்புகள் செய்வது, குறுந்தகவல் அனுப்புவது உள்ளிட்டவற்றை செய்ய முடியும். அதுமட்டுமின்றி வண்டி இயங்கும்போது தானியங்கி முறையில் குறுந்தகவலுக்கு பதில் அனுப்பும் வசதியும் உள்ளது. இதன் மூலமாக அதிவேகம் குறித்த எச்சரிக்கை தகவல்களை பெற முடியும்.

இந்த புதிய வசதியை ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் செயலிகள் மூலமாக இணைத்துக் கொள்ள முடியும். இந்த ஸ்கூட்டரில் ஓட்டும் முறைகள் குறித்த தகவலை பதிவு செய்யும் வசதியும் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version