கோபிசெட்டிபாளையத்தில், விசேஷ தினத்தையொட்டி வாழை தார்களின் விலை உயர்ந்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரம் இரு தினங்களில் வாழை தார்கள் ஏலம் நடைபெறுகிறது. ஏலத்தில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் சாகுபடி செய்த வாழைதார்களை கூட்டுறவு சங்கத்தில் நடைபெறும் ஏலத்தில் விற்பனை செய்து வருகின்றனர். மேலும் வாழைத்தார்கள் வரத்து குறைந்து காணப்பட்டதாலும், தொடர் விசேஷ தினங்கள் உள்ள காரணத்தாலும், வாழைத்தார்கள் தொடக்கத்திலிருந்தே நல்ல விலைக்கு ஏலம் போனது. குறிப்பாக செவ்வாழை தார் ஒன்று 750 ரூபாயில் தொடங்கி 810 ரூபாய் வரை விலை போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.