ஆள் பற்றாக்குறையை போக்கும்வகையில் நெல்லை மாவட்டம் தென்காசி அருகே தமிழக அரசின் மானியத்துடன் கூடிய நவீன கருவி மூலம் வாழை நடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தென்காசி, கிளாங்காடு, ஆய்க்குடி, அகரக்கட்டு, சுரண்டை போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் வாழை விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்பகிறது. இதில் ஆள்பற்றாக்குறை என்பது ஒரு குறையாகவே இருந்த நிலையில், இதைப்போக்கும் வகையில் வேளாண்துறை சார்பில் தமிழக அரசு பல்வேறு கருவிகளை பயன்படுத்த விவசாயிகளுக்கு சிபாரிசு செய்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக வாழை நடுவதில் நவீன கருவிமூலம் 6 அடி இடைவெளிகளில் குழிக்கு துளை போடப்படுகிறது. அதில் உரங்கள் முதலியவை போடப்பட்டு, வாழைக்கன்றுகள் நடப்படுகின்றன. இத்தகைய நவீன கருவிகள்மூலம் ஆள் பற்றாக்குறை போன்ற சங்கடங்கள் தீர்க்கப்பட்டு, விவசாயம் காக்கப்படுவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும் மானியத்துடன் வழங்கப்படும் இத்தகைய நவீன கருவிகள் மூலம் விவசாயம் செழிக்கும் என்றும் கூறினர்.