ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட்டது. அதனை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது

இதை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தாக்கல் செய்தது. இதை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், சில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளித்த நிலையில் இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் ஆலையை திறக்கலாம் என்ற தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதித்து ரோஹிங்டன் நாரிமன் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது

தமிழக அரசு எடுத்த சட்டப்போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகவே இந்த தீர்ப்பு பார்க்கப்படுகிறது

Exit mobile version