லக்னோ ரயில் நிலையத்தில் வாழைப்பழம் விற்பனைக்கு தடை

லக்னோ ரயில் நிலையத்தில் வாழைப்பழம் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதைத் திரும்பப் பெற வேண்டும் எனப் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். உத்தரப்பிரதேசத் தலைநகர் லக்னோவில் உள்ள சார்பாக் ரயில் நிலையம் 150ஆண்டுகள் பழைமையானது. இந்த நிலையத்தில் இருந்து நாள்தோறும் லட்சத்துக்கு மேற்பட்டோர் நாட்டின் பல்வெறு நகரங்களுக்குப் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையத்தின் வழியாக நாள்தோறும் நூற்றுக்கு மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் லக்னோ சார்பாக் ரயில் நிலையத்தின் கடைகளில் வாழைப்பழங்களை விற்கக் கூடாது என வடக்கு ரயில்வே தடை விதித்துள்ளது. இயற்கையானதும், விவசாயிகளின் விளைபொருளுமான வாழைப்பழங்களுக்குத் தடை விதித்தது விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கை எனப் பொதுமக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஏழை எளியோர் உணவாகப் பயன்படுத்தும் வாழைப்பழம் விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version