ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்த முழு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனைக் கண்காணிக்க தனிக்குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் முற்றிலும் தடை விதித்துள்ளது. அதற்கு மாற்று ஏற்பாடாக மாவட்டத்தின் முக்கிய நகரங்களிலும், நெடுஞ்சாலை ஓரங்களிலும் சுத்தமான குடிநீர் கிடைக்கும் வகையில் குடிநீர் ஏ.டி.எம்.களை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, இந்த ஏ.டி.எம் இயந்திரத்தினுள் 5 ரூபாய் செலுத்தினால், 1 லிட்டர் நீரைப் பிடித்து கொள்ள முடியும். அதன்படி 150 குடிநீர் ஏ.டி.எம்களை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்திற்கு பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் வரவேற்பு தெரிவித்துள்னர்.