தமிழக அரசு பிளாஸ்டிக்கிற்கு தடை விதித்ததன் எதிரொலியாக மூங்கிலால் செய்யப்பட்ட கூடைகளின் விற்பனை அதிகரித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே குடிசைத் தொழிலாக மூங்கில் கூடை தயாரிக்கும் பணியானது நடந்து வருகிறது. தற்போது தமிழக அரசு கொண்டு வந்துள்ள முழுமையான பிளாஸ்டிக் தடையால், கூடை மற்றும் துணி பைகளை பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
இதனால் இயற்கையாக தயாரிக்கபடும் மூங்கில் கூடைக்கு பொது மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், நல்ல விலைக்கு விற்பனை ஆகிறது. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள மூங்கில் கூடை தயாரிக்கும் தொழிளாலர்கள், தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.