சென்னை உயர்நீதிமன்றத்தில் பாலகிருஷ்ண ரெட்டி மேல்முறையீடு

பொதுச்சொத்துகளை சேதப்படுத்திய வழக்கில் சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள பாகலூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கள்ள சாராய விற்பனையை எதிர்த்து 1998 ஆம் ஆண்டு பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில், அரசு பேருந்து மற்றும் காவல்துறை வாகனம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் தொடர்பாக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி உட்பட 108 பேர் மீது நடைபெற்று வந்த வழக்கு விசாரணை சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், பாலகிருஷ்ணரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. இதன் பின்னர், பாலகிருஷ்ணரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3ஆண்டுகள் தண்டனை நிறுத்தி வைத்து, அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதைதொடர்ந்து பாலகிருஷ்ணரெட்டி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

Exit mobile version