தமிழகம் முழுவதும் சமூக இடைவெளியுடன் பக்ரீத் கொண்டாட்டம்!

இஸ்லாமியர்களின் இறைத்தூதர் இப்ராஹிமின் தியாகத்தை நினைவுகூறும் வகையில், பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இஸ்லாமியர்கள் மசூதிக்கு செல்ல முடியவில்லை. இதனால் வீடுகளிலேயே சமூக இடைவெளியை பின்பற்றி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். கோவையில் உக்கடம், போத்தனூர், குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளிலேயே இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் ஆட்டிறைச்சி மற்றும் இனிப்புகளை ஏழை-எளிய மக்களுக்கும், உறவினர்களுக்கும் கொடுத்து அன்பை பகிர்ந்து கொண்டனர்.

Exit mobile version