உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி – இந்திய வீரர் பஜ்ரங் பூனியாவிற்கு வெள்ளிப்பதக்கம்

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய முன்னணி வீரர் பஜ்ரங் பூனியா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்றது. இதில் 65 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் பஜ்ரங் பூனியாவும், ஜப்பான் வீரர் டகுடோ ஒடோகுரோவுடம் மோதினர்.

இதில் பஜ்ரங் புனியா சிறப்பாக விளையாடினாலும், ஜப்பான் வீரர் ஒடோகுரோ அவரை சமாளித்தார். 16-9 என்ற கணக்கில் ஒடோகுரோ பஜ்ரங் புனியாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். பஜ்ரங் புனியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

உலக மல்யுத்தத்தில் இரண்டாவது முறையாக இந்திய வீரர் பஜ்ரங் புனியா பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version